வாணியம்பாடி முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, சிவகாசி நீதி மன்றத்தில் சரண்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஜே.எம் 1 நீதிமன்றத்தில், வாணியம்பாடி முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி, இன்று மாலை சரணடைந்தார்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுண் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம்அக்ரம் (43). மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில செயலாளராகவும், முன்னாள் நகராட்சி கவுன்சிலராகவும் இருந்த வசீம்அக்ரம் கடந்த 10ம் தேதி, ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க வாணியம்பாடி போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான வசீம்அக்ரமின் நண்பர், டீல் இம்தியாஸ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் டீல் இம்தியாஸ், விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஜே.எம் 1 நீதிமன்றத்தில் சரணடைந்தார். வாணியம்பாடி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி, சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..