
சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுக்கு, உட்பட்ட 7 வாக்குச்சாவடி மையங்கள் பள்ளிக்கூடங்களில் தீவிர தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமினை, செயல் அலுவலர் ஜீலான்பானு தொடங்கி வைத்தார். வருவாய் ஆய்வாளர் ராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் சோழவந்தான் ஜெயபிரகாஷ், சோலை குறிச்சி சுரேஷ்கண்ணன், பேட்டை கார்த்திஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் திலீபன் சக்கரவர்த்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் பங்கேற்றனர். இதேபோல், சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ துறை இணை இயக்குனர் வெங்கடாஜலம் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவர் தீபா, சுகாதாரப் பணி ஆய்வாளர் கிருஷ்ணன், தலைமைச் செவிலியராக லட்சுமி, செவிலியர்கள் கௌரி திலகா. நிஷாந்தினி, லட்சுமி, துர்கா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.