கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை மாநகராட்சி திரும்பப்பெற வேண்டுமென ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.

மதுரையில் நாட்டு மாடு நல சங்கத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவந்தானில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கும், கடையநல்லூரில் கிடா முட்டு நடத்தியதற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொடர்ந்து, நாட்டு மாடுகளை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என, மதுரை மாநகராட்சியின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..