
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா எலியார் பத்தியில் டீ குடிக்க சென்றவர் கன்டெய்னர் லாரி மோதி பலிஇதுகுறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறந்தவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்த பெரிய ஆம்பளை மகன் கருப்பன் (வயது 65) என தெரியவந்தது தனது பேரன் திருமணத்திற்காக எலியார்பத்தி வந்த இவர் அதிகாலை டீக்கடைக்கு டீ குடிக்க வந்த போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி நசுக்கி சம்பவ இடத்திலேயே கருப்பன் பலியானார்.தூத்துக்குடி மாவட்டம் மீலவிட்டன்கிராமத்தை சேர்ந்த முத்துராமன் என்பவரின் மகன் ராஜ் என்பவர் ஒட்டிகருப்பன் மீது மோதியதில் கீழே விழுந்த கற்பனை நசுக்கி சென்ற கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றதுஇதுகுறித்து தகவல் தெரிந்து வந்த கூடக்கோவில் போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கி கூடகோவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது லாரி டிரைவர் அருகில் இருந்தடோல்கேட் சுவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார் பின்னர் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.