மதுரையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் சுமார் 12 லட்சம் ரூபாய் திருட்டு.!! எச்சரிக்கையாய் இருக்க வங்கி நிர்வாகம் வேண்டுகோள்

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் தெரு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் இவருக்கு வயது 70,இவர் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார்,இந்த நிலையில் வீட்டின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து மர்மநபர் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி தங்களுடைய வங்கி விவரங்களை கேட்டுள்ளார், நாராயணனும் வங்கி அதிகாரிகள் என நினைத்து அனைத்து தகவலையும் தெரிவித்த நிலையில் வங்கியில் இருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது, அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். வங்கி அதிகாரி நம்மிடம் தெரிவிக்கையில். வங்கியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தினசரி குறுந்தகவல் மூலமாகவும் வங்கியில் அறிவிப்பு பலகை மூலமாக மற்றவர்களிடம் தங்களது ஏடிஎம் கார்டில் உள்ள எண்களையும் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணையும் யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளோம் மேலும் தொலைபேசி மூலமாக அதிக அளவில் மோசடி நடைபெற இருப்பதால் வங்கியில் இருந்து யாராவது கூப்பிட்டால் இணைப்பை துண்டித்து நானே தாக இருந்தாலும் வங்கியில் நேரடியாக வந்து பார்த்துக் கொள்கிறோம் என பலமுறை வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம் என தெரிவித்தார் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டுமென வாடிக்கையாளருக்கு கேட்டுக்கொண்டுள்ளார் எந்த ஒரு வங்கியும் அதிகாரிகளும் தொலைபேசி வாயிலாக ஏடிஎம் கார்டு மாற்றம் செய்வதற்கு தொலைபேசி மூலமாக அழைக்க மாட்டார்கள் எனவும் இதுபோன்று தொலைபேசி அழைப்பு வந்தால் இணைப்பை உடனடியாகத் துண்டித்து விடுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்