
மதுரை திருமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (42) போக்குவரத்து புலனாய்வுத்துறை தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில்பெருங்குடி ரிங் ரோடு அருகே உள்ள சின்ன உடைப்பு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து விசாரணை நடத்த டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலாநகர் சந்திப்பில் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.