
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்காக ஆண்டுதோறும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் விதவிதமாக செய்வது வழக்கம் அதன் அடிப்படையில் இந்த ஆண்டு இரண்டு பெரிய விநாயகர் சிலைகள் பிரம்மாண்டமாக தயார் செய்து வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் ஒட்டகம் ஒட்டகச்சிவிங்கி காண்டாமிருகம் .யானை மீது விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலைகள் தயார் செய்து விநாயகர் சதுர்த்திக்காக தயார் நிலையில் உள்ளது .மத்திய அரசின் வழிகாட்டுதல் படி விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்ல தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்ததை அடுத்து விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடுவதற்கு தயார் நிலையில் உள்ளது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் அனைவரும் தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.