மதுரையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.

மதுரை மாநகராட்சி மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர். கூட்டமைப்பின் மாநில துணை அமைப்பாளர் மதுரை மாவட்டம் எஸ் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் விநாயகமூர்த்தி, மாநில மகளிரணி தலைவர் நாகம்மாள், மாநில துணைத் தலைவர் பீட்டர் ஞானசேகரன், மாநில துணைப் பொதுச் செயலர் குமரேசன், மாநில துணைப் பொதுச் செயலர் ராமன், மாநில துணைத் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்