அரசு மருத்துவமனையில் லிப்ட்டில் சிக்கிய நோயாளிகள். பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவ வார்டில் நேற்று மாலை சுமார் 13 பேர் லிப்டில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் பழுதாகி கதவை திறக்க முடியாமல் போனது. இதனால் பயந்துபோன நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களும் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி லிப்ட்டில் சிக்கிய 13 பேரை பத்திரமாக மீட்டனர் .இதனால் அரசு மருத்துவமனையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு. லிப்ட் நின்றது காரணம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். எனினும் தீயணைப்பு துறையில் துரிதமான செயல்பாட்டினால் 13 பேர் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..