
மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள புல்லூத்து பிரிவு அஷ்டலட்சுமி நகரில் கீழமாத்தூர் கண்மாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்காலை ஒரு சிலர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்து தகரம் அடைத்துள்ளனர். இது குறித்து மேற்கு தாலுகா அலுவலகம் மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆகிய இடங்களில் உள்ள அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகள் சிலர் வேலி அமைத்தவரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க தயங்குவதாக தெரிகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து நீர் பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.