
மதுரை என்றவுடன் உலக மக்கள் அனைவருக்கும் முதலில் நினைவில் வந்து நிற்பது வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் நிறைந்த அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் ஆகும். தினந்தோறும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் மக்களின் அடிப்படை வசதிகளான சுகாதாரமான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் முறையாக இல்லை. சில கழிப்பிடங்கள் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளன. நவீன் பேக்கரியிலிருந்து வடக்குக் கோபுரம் (பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதி) செல்லும் பகுதியில் மதுரை மாநகராட்சியினால் சிறுநீர் கழிப்பிடம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அச்சிறுநீர் கழிப்பிடம் நோய் பரப்பும் மையமாகத் திகழ்கின்றது.சிறுநீர் கோப்பைகளிலே சிறுநீர் தேங்கி நிற்கின்றது.மேலும் சுத்தப்டுத்துவதற்கான தண்ணீர் குழாய் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு அவல நிலையில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் அருகில் வெளிப்புறங்களில் சிறுநீர் கழித்து அதிக சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்தப் பகுதி முழுவம் சிறுநீர் நாற்றங்களால் மக்கள் மிகவும் துன்பப்படுகின்றார்கள். அந்தப் பகுதியை கடந்து செல்லும் அனைத்து தரப்பு மக்களும் முகம் சுழித்தவாரே வேதனையோடு கடந்து செல்கிறார்கள். ஆன்மீகம் நாடிவரும் மக்கள் மேற்கண்ட சுகாதார சீர்கேட்டின் அவல நிலையால் வேதனையோடு செல்வது என்னைப் போன்ற பலருக்கும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மேற்கண்ட சிறுநீர் கழிப்பிடத்தை உடனடியாக சரிசெய்து சுகாதாரமான சிறுநீர் கழிப்பிடம் மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை மதுரை மாநகராட்சி ஆணையர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.