மதுரை சோழவந்தான் அருகே காடுபட்டி யில் தடையை மீறி ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது ஜல்லிக்கட்டு பிரியர்கள் வலைத்தளங்கள் மூலமாக ஜல்லிக்கட்டு விழா நடத்த ஏற்பாடு செய்ததாகவும் நேற்று இரவு காடுபட்டி அருகே உள்ள மலையில் கன்னிமார் கோவில் உள்ளது அங்கே மின் விளக்கு வசதி ஏற்பாடு செய்து கிராமத்தில் உள்ள சில பெரியோர்களின் ஆதரவோடு பல்வேறு மாவட்டங்களில் இருந்து டோக்கன் மூலம் ஜல்லிக்கட்டு மாடுகள் வரவழைக்கப்பட்டது பின்பு ஜல்லிக்கட்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்த மலைக்கு ஊருக்குள் வராமல் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்ததாகவும் விடிய விடிய வாகன போக்குவரத்து இருந்ததால் கிராம மக்கள் பதட்டத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது சுமார் 150 ஜல்லிக்கட்டு மாடுகளும் சுமார் 100 மாடுபிடி வீரர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் இரவே வந்து விட்டதாக கூறப்படுகிறது நேற்று அதிகாலை ஜல்லிகட்டு பிரியர்கள் சாமி கும்பிட்டு ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டதாகவும் அவிழ்த்துவிட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசுகளும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதாக தெரிகிறது இவ்வளவு பிரம்மாண்டமாக நடந்த ஜல்லிக்கட்டு விழா எப்படி போலீசாருக்கு தெரியாமல் இருந்தது என்பது வியப்பாக உள்ளது காலை 8 மணி அளவில் கிராமமே பரபரப்பாக காணப்பட்டதால் போலீசுக்கு தகவல் தெரிஞ்சு இன்ஸ்பெக்டர் சிவபாலன் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை சுற்றிய வ ழைத்ததாகவும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியதாகவும் மீதி இருந்தவர்களையும் மற்றும் அங்கிருந்த மினிவேன் 2 மோட்டார் சைக்கிள் 16 மற்றும் அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்