மதுரையில் நகர் பகுதியில் நல்ல மழை, பொதுமக்கள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி , திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில், மதுரை நகர் பகுதிகளான பழங்காநத்தம், பெரியார் நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. அண்ணாநகர், கோமதிபுரம், மேலமடை, கருப்பாயூரணி, வண்டியூர், யாகப்பநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்றுதிருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான திருநகர் தனக்கங்குளம் பெருங்குடி விமான நிலையம் வில்லாபுரம் அவனிடம் பகுதிகளில் பரவலாக மழைமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான திருநகர் திருப்பரங்குன்றம் தனக்கங்குளம் பெருங்குடி விமான நிலையம் அவனியாபுரம் வில்லாபுரம் சிந்தாமணி பகுதிகளில் கடந்த அரை மணி நேரமாக மழை பெய்தது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..