மதுரை அருகே கோவில் இடிப்பு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு .

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட இலங்கியேந்தல்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட வாழவந்தான் அம்மன் கோவில், பொதுப்பணித்துறை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்ற கோரியும் அதே ஊரை சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு செய்திருந்தார். இதன் அடிப்படையில் கோவிலை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 22 ம் தேதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்ததை கண்டித்து 500க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் மற்றும் இந்துமுன்னணி, உள்ளிட்ட இந்து அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மக்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து தற்காலிகமாக கோவிலை இடிப்பது நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மீண்டும் கோவிலை இடிக்கும் பணியினை பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்