மதுரை மாநகராட்சி18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்பதிவின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் ஆணையாளர் தகவல்.

மதுரை மாநகராட்சிக்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு தட்டுப்பாடின்றி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநகர் முழுவதும் 12 இடங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் காலை 11 மணி முதல் 4 மணி வரை முன்பதிவு ஏதுமின்றி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இணையதளத்தில், முன்பதிவு செய்தவர்கள் காலை 9 மணி முதல் 11 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இளங்கோ பள்ளி மையத்தில் மட்டும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். ஏற்கனவே, நடைபெற்று கொண்டிருந்த முகாம்கள் செவ்வாய்கிழமை வரை நடைபெறும். 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட உள்ளதால், புதன்கிழமை முதல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் ஞாயிறு தவிர, அனைத்து நாட்களும் முகாம்கள் நடைபெறும்.வ.எண்.வார்டு எண்.பள்ளியின் பெயர்பள்ளி அமைந்துள்ள இடத்தின் பெயர்:9.திரு.வி.க.ஆரம்பப்பள்ளிபெரியசாமி கோனார் தெரு.23. மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகாமாட்சி நகர், பழைய விளாங்குடி7. மனோகரா ஆரம்பப்பள்ளிதியாகி பாலு 3-வது தெரு.33மாநகராட்சி பள்ளிஅண்ணா நகர் மெயின் ரோடு, சாத்தமங்கலம்46.ஜான்போஸ்கோ பள்ளிசிங்காரவேலர் தெரு.25.அரசு நடுநிலைப்பள்ளிஜி.ஆர்.நகர், கண்ணனேந்தல்.50உமறுபுலவர் பள்ளிசுங்கம் பள்ளிவாசல் ஏ.வி.பாலம் அருகில்.70.பழனியப்பா பள்ளிகார்ப்பரேசன் காலனி, சி.எம்.ஆர்.ரோடு65.நாடார் நடுநிலைப்பள்ளிநாடார் வித்யாசாலை சந்து, தெற்குவாசல்.78.திடீர்நகர், ஈ.வெ.ரா.ஆரம்பபள்ளிதெற்கு வெளி வீதி.75.பழங்காநத்தம் மாநகராட்சி பள்ளிஉழவர்சந்தை அருகில்.99.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிதிருப்பரங்குன்றம் மெயின் ரோடு.கர்ப்பிணிகள் மற்றும் அவர்தம் கணவர், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அவர்தம் கணவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு எவ்வித முன்பதிவும் இன்றி ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி வழங்கப்படும்.இது தவிர மக்கள் நல அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், தொழில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்த விரும்பினால், மாநகராட்சி தகவல் மையத்தை 94437-52211 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..