Home செய்திகள் மோடி அரசின் பிடிவாதப் போக்கினால் காரணமே நாடாளுமன்ற இரு அவைகளும் நடத்த முடியாமல் போனதற்கு காரணம் – தொல் திருமாவளவன்

மோடி அரசின் பிடிவாதப் போக்கினால் காரணமே நாடாளுமன்ற இரு அவைகளும் நடத்த முடியாமல் போனதற்கு காரணம் – தொல் திருமாவளவன்

by mohan

மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைத்தது நடப்பு நிதியாண்டில் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது போன்றவை தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.மோடி அரசின் பிடிவாதப் போக்கினால் காரணமே நாடாளுமன்ற இரு அவைகளும் நடத்த முடியாமல் போனதற்கு காரணம் தொல் திருமாவளவன்+சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்புமதுரை ஆதீனம் அவர்கள் காலமாகி இருக்கிறார். அவருடைய மறைவு தமிழ்ச் சமூகத்திற்கும்சைவ சமயத்திற்கும் நேர்ந்திருக்கும் பேரிழப்பாகும்.அவர் ஆன்மீக தளத்தில் மட்டுமின்றி மதநல்லிணக்கம். ஈழத்தமிழர் விடுதலை. தமிழ் வழிபாடு தமிழில் குடமுழுக்கு போன்ற பல்வேறு அரசியல் பிரச்சினைகளையும் ஈடுபட்டு தனது கருத்துக்களையும் முன்மொழிந்தவர்.பாடுபட்டவர் சமூக நல்லிணக்கத்தை வென்றெடுப்பதற்காக பொறுப்புணர்வோடு பணியாற்றியவர்.

விடுதலைச் சிறுத்தைகளை ஊக்கப்படுத்தினார் அவருடைய உடலுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த இருக்கிறோம்.அவருடைய மறைவு சைவ சமயத்துக்கும் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சனாதன சக்திகள் தங்களை ஆக்கிரமித்த போது சைவர்கள் இந்துக்கள் இல்லை என்று துணிவாக வெளிப்படையாகப் பேசியவர்.சமஸ்கிருத ஆதிக்கத்தை ஒருபோதும் அவர் ஏகாதவர்.ஆகவே அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பை எண்ணி வருந்துகிறோம்.அவருக்கு வீரவணக்கம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே மூடப்பட்டது அதாவது முடித்து வைக்கப்பட்டது ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் இந்த கூட்டத்தொடர் நடந்து இருக்க வேண்டும் 11ஆம் தேதியே நிறைவடைந்ததாக அறிவித்துவிட்டார்கள் .அதற்கு அவர்கள் சொன்ன காரணம் எதிர்க்கட்சிகள் அவையை நடத்த அனுமதிக்கவில்லை நாகரீகமாக நடந்து கொண்டார்கள் என்று சொன்னதோடு மட்டுமின்றி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கண்கள் கூடிய அளவுக்கு கருத்துக்களை முன்வைத்தார்.மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாபோன்றவர்கள் மக்களவையில் கடைசி நாளன்று எதிர்க்கட்சிகள் மிகுந்த மன உளைச்சலை தரும்படி நடந்துகொண்டார்கள் என்றெல்லாம் பதிவு செய்தார்கள்.

ஆனால் நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஒரே கோரிக்கை பெகாசஸ் என்னும் மென்பொருள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதுதான்.இரண்டு அவைகளிலும் இந்த மென்பொருளை இந்திய அரசு பயன்படுத்துகிறதா இல்லையா அப்படி என்றால் என்ன நோக்கத்திற்காக வாங்கப்பட்டது. இதனை பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த விளக்கம் தேவை இந்த அடிப்படையில்தான் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.ஆனால் அதுகுறித்து விவாதிக்க பெரும் மன்றங்களிலும் விவாதிக்க தயாராக இல்லை.தமிழக அரசுநிதிநிலை தாக்கல் செய்தபோது வேளாண் குறித்து தனியாக தாக்கல் செய்தது வரவேற்கத்தக்கதுவேளாண் சட்டங்கள் குறித்த பிரச்சினைகள் பேசப்படவேண்டும் மக்களின் போராடிக்கொண்டிருக்கிறார்கள் இருந்தாலும்கூட விலைவாசி உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றை பற்றி பேச வேண்டும் என்றாலும் கூட விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் இந்தியா முழுவதும் தலைவிரித்தாடிய நிலையில் அதுபற்றி பேச வேண்டும் என்றாலும் கூட எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு சம்பந்தமாக மட்டும் விவாதிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் ஜூலை 19 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 11ம் தேதி வரையில் அதற்கு அனுமதிக்கவில்லை.

ஆகவே மோடி அரசின் பிடிவாதமான போக்கு தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூச்சல் போடுவதற்கு காரணமே தவிர நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலைவர்கள் சபாநாயகர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டுமம்.தமிழக அரசுநிதிநிலை தாக்கல் செய்தபோது வேளாண் குறித்து தனியாக தாக்கல் செய்தது வரவேற்கத்தக்கதுதமிழக அளவில் அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கக் கூடிய ஒரு நிதி நிலை அறிக்கையை தான் திமுக அரசு வழங்கியிருக்கிறது அளித்திருக்கிறது.வேளாண்மை குறித்து தனி நிதிநிலை அறிக்கை முதன் முறையாக திமுக அரசு தாக்கல் செய்திருக்கிறது இந்தியாவில் இது மூன்றாவது மாநிலம் என்று சொல்லப்படுகிறது. கர்நாடகா. ஆந்திரப் பிரதேச அடுத்து தமிழகத்தில் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் அறிவித்திருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டுகிறதுபனை விதைகளைஊன்ற வேண்டும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்து வரவேற்கத்தக்கது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கான விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கவிதைகளையும் பனைமரத்தை பாதுகாப்பதற்கான ஒரு இயக்கத்தை எடுத்தோம்.இன்று தமிழக அரசே முன்வந்து அதை ஒரு கொள்கை அடிப்படையிலான செயல்திட்டமாக அறிவித்திருப்பதை மனமார வரவேற்று பாராட்டுகிறோம்.தமிழக அரசு பெட்ரோல் மீதான வரி விதிப்பில் மூன்று ரூபாய் குறைத்திருப்பது உள்ளபடியே மிகுந்த ஆறுதலைத் தருகிறது அதற்காக தமிழக முதல்வர் அவர்களின் நிதி அமைச்சர் அவர்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டுகிறது.பிற மாநிலங்களுக்கு முன்னோடி யான ஒரு முடிவு துணிச்சலான முடிவு ஆகவே அதனை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கை குறித்த கேள்விக்குபல்வேறு தரப்பினரும் வரவேற்று பாராட்டி கொண்டிருக்கிறார்கள் . ஆனால் ஜெயக்குமார் அவர்கள் தற்போது மக்களிடமிருந்து அன்னியப்பட்டு இருப்பதால் இத்தகைய விமர்சனத்தை முன் வைக்கிறார்கள்.நீண்ட நெடிய கனவு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று பெரியார் நெஞ்சில் ஒரு முள் அதை எடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அதற்கான சட்டத்தை கொண்டு வந்தவர் மேனாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அவருடைய அந்த முயற்சி தடைப்பட்டிருந்தது தற்போது அதை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார் என்ற முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் முதல்வர் அவர்களுக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் செய்பவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.இது தமிழக இது இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்து இருக்கிறார்கள்.ஒரு மாபெரும் பணி ஏற்கனவே கேரளாவில் அவ்வாறு ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் சிலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்றாலும் தற்போது பெண்கள் உட்பட எல்லா சமூகத்தைச் சார்ந்தவர்களும் கோவிலின் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்யக் கூடிய உரிமையை சட்டபூர்வமாக்கி நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்து இருப்பது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை.காலாகாலத்திற்கும் ஜனநாயக சக்திகளை பாராட்டப்பெறும் ஒரு மகத்தான சாதனை இது இதனை விடுதலைச் சிறுத்தைகள் மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!