மதுரையில் குழந்தைகள் விற்ப்பனை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் மத்திய சிறையில் விசாரணை.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் காணாமல் போனதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இரண்டு குழந்தைகளும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து,இரு குழந்தைகளையும் பராமரித்து வந்தவர்களிடமிருந்து இரு குழந்தைகளையும் மீட்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தன்னார்வ நிறுவனத்தின் இயக்குனர் சிவக்குமார், அறக்கட்டளையின் நிர்வாகி மாதர்ஸா, இடைத்தரகர்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.இதற்கிடையே ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து குழந்தைகள் மாயமானது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது முதல் கட்டமாக இந்த வழக்கு தொடர்பாக வருவாய்த்துறையினர், காவல் துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக மதுரையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளரும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சுந்தரேசன் முன்பு புகார்தாரரான அசாருதீன், மாவட்ட சமூக நல அலுவலர், மாநகராட்சி நகர்ப்புற மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகினர்.இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் மத்திய சிறையில் இருக்கும் காப்பக இயக்குனர், நிர்வாகிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அவர்களிடம் இன்று விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் இன்று காலை மத்திய சிறைக்கு வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் சுமார் 3 மணி நேரத்திற்க்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்