Home செய்திகள் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில்வளர்ச்சி திட்டப்பணிகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில்வளர்ச்சி திட்டப்பணிகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

by mohan

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், பார்வையிட்டார்.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில்; ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தையும், ஜல் ஜீவன் மின் திட்டத்தின் கீழ், ரூபாய் 18.96 இலட்சம் மதிப்பீட்டில் 115 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளையும், ஊராட்சி பொதுநிதியின கீழ் ரூபாய் 9.50 இலட்சம் மதிப்பீட்டில் சமத்துவபுரம் சாலை மேம்படுத்தும் பணியினையும், குட்லாடம்பட்டி ஊராட்சி தாடக நாச்சிபுரத்தில் ஜல் ஜீவன் மின் திட்டத்தின் கீழ் ரூபாய் 7 இலட்சம் 70 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளையும், ஊராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 5.50 இலட்சம் மதிப்பீட்டில் 3,7 மற்றும் 8 ஆகிய தெருக்களை மேம்படுத்தும் பணியினையும் மற்றும் ஆண்டிப்பட்டியில மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1.72 இலட்சம் மதிப்பீட்டில் 200 மரக்கன்றுகள் நடும் பணியினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.முன்னதாக, குட்லாடம்பட்டி அருவியில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தவும், தடுப்பு சுவர் அமைக்கவும், கண்காணிப்பு கோபுரத்திலிருந்து அருவிக்கு செல்லும் பாதையில் பழுதடைந்துள்ள மரப்பாலத்தினை சரிசெய்யவும், நுழைவு வாயிலுக்கு அருகில் புகைப்படம் எடுக்கும் இடத்தினை அமைக்கவும். நுழைவு சீட்டு வழங்கும் இடம் அமைக்கவும், சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் சுற்றுலாவை மேம்படுத்தவும், நடைபாதைகளில் பாறைகளை வெட்டி வைத்து பாதை அமைக்கவும் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுலாத்துறை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில், மாவட்ட சுற்றுலா அலுவலர்சிவராஜன்,வாடிப்பட்டி வட்டாட்சியர்நவநீதன்வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரத்தின கலாவதி,பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com