ரயில்வே நிலையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் நடைமேடை பணி ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் செய்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் .

மதுரை ரயில் நிலையம் நான்காவது நடைபாதையிலிருந்து மேல வருவதற்கோ அல்லது மேலிருந்து கீழே வருவதற்கு வழி இல்லாமல் ஒரு நபர் மட்டும் வருமளவுக்கு வழி வைத்திருக்கிறார்கள். மேலும் படிக்கட்டுகளில் வலதுபுறம் இரும்பு கம்பிகள், இரும்பு குழாய்களும் வைத்திருப்பதால் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே விபத்து ஏற்படும் முன்பு, அங்கு உள்ள இரும்பு கம்பிகளும் மற்ற பொருள்களும் அகற்ற வேண்டும் என்று ஒரே சமயத்தில் குறுகலான பாதையில் நூற்றுக்கணக்கான பயணிகள் நடை மேடை ஏறும் படிக்கட்டுகளில் சென்று வருவதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகிறது இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர் உடனடியாக மதுரை ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுக்கின்றனர் மேலும்.(அங்கு கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது)

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்