
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மதுரை மாவட்ட நிர்வாகம் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது எனினும் விதியை மீறி தினசரி தண்ணீரை திறந்துவிட்டு வலை போட்டு மீனை பிடித்து வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள் பலர் சொல்லியும் கேட்காமல் அடியாட்களை வைத்து தொடர்ந்து மீன்களை பிடித்து வருகிறார்கள் பிடித்த மீன்களில் இறந்த மீன்களை கம்மாக்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் வீசி செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது சமூக ஆர்வலர்கள் பலமுறை தடுத்த போதும் குண்டர்களை வைத்து மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நீர் ஆதாரத்தை காக்க சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.