அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் வறுகடலை மில் அருகே ஒரு முட்புதருக்குள் எரிந்த நிலையில் இளம்பெண் உடல் கண்டெடுப்பு.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் சோழவந்தான் பகுதியை சேர்ந்த சகாய ராஜ்-செல்வமேரி தம்பதியினரின் மகள் கிளாடிஸ் ராணி (20) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரும் கிளாடிஸ் ராணியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிளாடிஸ் ராணி கர்ப்பம் அடைந்ததால் இருவருக்கும் கடந்த 02.08.2021 ம் தேதி பெண் வீட்டார் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் இருவரும் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.இந்நிலையில் 4-ம் தேதி வெளியே சென்று வரலாம் என ஜோதிமணி கிளாடிஸ் ராணியை அழைத்துள்ளான்., இருவரும் கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் ஜோதிமணி மட்டும் தனியாக வீடு திரும்பி வந்த நிலையில் கிளாடிஸ் ராணியை காணவில்லை என கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களுடன் இணைந்து ஜோதிமணி ஊர்முழுக்க தேடுவது போன்ற நாடகம் ஆடியுள்ளார். இதனை அடுத்து நான்காம் தேதி மாலை சோழவந்தான் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் செய்துள்ளனர். கிளாடிஸ் ராணியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் ஜோதிமணி மீது சந்தேகம் அடைந்தனர்.இந்நிலையில் ஜோதிமணி இடம் விசாரணை மேற்கொண்டதில்., பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ஜோதிமணி காதலித்து திருமணம் செய்த மனைவி கிளாடிஸ் ராணியின் 4கு மாத கர்ப்பத்திற்கு தான் காரணமல்ல என்ற சந்தேகத்தால் ஜோதிமணி கடந்த 4ஆம் தேதி மனைவியிடம் வெளியே செல்வோம் என அழைத்துச் சென்று அவனியாபுரம் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் வைத்து கிளாடிஸ் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக சோழவந்தான் போலீசாரின் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளான்.மேலும்., இந்த கொலை தனியாக செய்யப்பட்டதா அல்லது கூட்டாக சேர்ந்து செய்தார்களா என்பது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்