கணவர் அடித்து துன்புறுத்தியதால் மூளை நரம்பு பாதித்து உடலுறுப்புகள் செயலிழந்த இளம்பெண் – மருத்துவ நிதியுதவி அளிக்க பெற்றோர் ஆட்சியரிடம் கோரிக்கை.

மதுரை எம்கேபுரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்த குமார் – முனியம்மாள் தம்பதியினரின் மகளான மகாலெட்சுமி திருப்பூரில் பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில் 19வயதான தனது மகள் மகாலெட்சுமிக்கு அவரது உறவினரான சந்தானகுமார் என்ற கூலித்தொழிலாளியுடன் கடந்த ஆண்டு திருமண நடைபெற்றுள்ளது.ந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி கணவர் சந்தனகுமார் மனைவி மகாலெட்சுமியை அடித்து துன்புறுத்தியதோடு தலையணையை பயன்படுத்தி முகத்தில் அழுத்தியதோடு கழுத்தில் துணியால் இறுக்கி கொலை செய்ய முயன்றதாக புகார் அளிக்கப்பட்ட எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.கணவர் சந்தானகுமார் தாக்கிய நிலையில் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடிரென மூளை நரம்பு பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது மகாலெட்சுமியின் கைகால்கள் முழுவதிலும் செயலிழந்துவிட்டது.இதனிடையே தனது மகள் மகாலெட்சுமிக்கு மருத்துவ நிதியுதவி அளிக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குமார் மற்றும் பெண்ணின் உறவினர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.இளம்சிட்டாய் சுதந்திரமாய் உழைத்து வாழ்ந்து வந்த இளம்பெண் மகாலட்சுமியை விரும்பி திருமணம் செய்த சந்தானகுமார் முன்கோபத்தில் செய்த தகராறால் சிறகுகள் உடைந்து எதிர்ரகாலம் இன்றி தவித்துவரும் மகாலடசுமிக்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதுமகாலெட்சுமியின் புகார் குறித்து தொலைபேசி வாயிலாக விளக்கமளித்த கணவர் சந்தானகுமாரின் தாயார் கூறியபோது : உறவினர் என்ற அடிப்படையில் விருப்ப பட்டு திருமணம் முடித்தவைத்த நிலையில் தனது மகனின் முன்கோபத்தால் ஏற்பட்ட பாதிப்பால் உடல்நலம் குன்றியதாக கூறினாலும் அவரின் மருத்துவத்திற்க்காக உதவி வருகிறோம் எனவும், தற்போது வரை தனது மகன் மனைவி மகாலெட்சுமியை கவனித்து வருவதாகவும் அரசு உதவியோடு தனது மருமகள் மீண்டு வந்தால் மன நிம்மதி என உருக்கமுடன் தெரிவித்தார்இதனிடையே மகாலட்சுமி 3ஆண்டு பணி புரிந்த தொழிற்சாலையில் நீண்டநேரம் நின்றபடியே பணிபுரிந்ததால் கூட இது போன்ற உடல்நலம் குன்றி இருக்கலாம் எனவும் கூறினார்.இந்த நிலையில் மருத்துவ நிதியுதவி செ ய்து தர கோரியும் கணவர் மீது நடவடிக்கை கோரியும் பெண்ணின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்