மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழ்நாடு பைனான்சியர் பெடரேஷன் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழ்நாடு பைனான்சியர் பெடரேஷன் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயரங்கன் பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் உதவி தலைவர்கள் பழம்பதி, முத்தையா, இணைச் செயலாளர் சென்ன கேசவன், செல்வம், காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொராணா பேரிடர் காலத்தில் தொழில் நலிவடைந்து வருவது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. லைசென்ஸ் புதுப்பித்தல் தொடர்பான விதிகளை எளிமையாகவும் அது சம்பந்தமாக விரைவில் மாண்புமிகு மாநில வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து கோரிக்கை வைக்கவும் ஆலோசிக்கப்பட்டது .மூன்றாண்டு புதுப்பித்தல், மேனுவல் ஆக செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வில் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து அனைவரும் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வுடன் போராட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்