மதுரை கீழ மாசி வீதியில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட கல் பாசம் என்னும் வன விளை பொருள் பறிமுதல்.

உணவு மற்றும் நாட்டு மருந்துக்கு பயன்படுத்துவதற்காக கல்பாக்கம் வனவிளை பொருள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் விளக்குத்தூண் காவல்துறையினர் கீழ மாசி வீதி தேர்முட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குப்பம்மாள் பட்டியில் இருந்து எந்தவித அனுமதியும் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கல் பாசம் என்னும் வன விளைபொருளை உணவு மற்றும் நாட்டு மருந்து பயன்படுத்த கடத்தி வந்ததாக கமால் பட்டியை சேர்ந்த டிரைவர் கதிரேசன் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கல் பாசம் என்னும் வனவிளை பொருள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

#Paid Promotion