Home செய்திகள் சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர்ஆய்வு செய்தார்:

சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர்ஆய்வு செய்தார்:

by mohan

மதுரை மாவட்டம்,சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், அப்பகுதி மக்களுக்கு அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், இங்குள்ள மக்கள் குடிநீர் கேட்டு அவ்வப்போது, போராட்டம் நடத்துவதும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக குடிநீர் வசதி செய்து கொடுப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது .நேற்றைய முன் தினம் ஆசிரியர் காலனியில் வசிக்கும் மக்கள் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் போட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட, அப்பகுதி மக்களிடம் பேரூராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வசதி செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள். கலைந்து சென்றனர் இதனைத் தொடர்ந்து,மாவட்ட ஆட்சியர் அனிஷ்குமார் ரயில்வே மேம்பாலம் வேலை செய்யும் இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, விரைவில் இந்த வேலையை முடித்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இதில், வெங்கடேசன் எம்.எல்.ஏ., வாடிப்பட்டி வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ், சுரேஷ் கண்ணன் உள்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், மன்னாடிமங்கலம் கிராமத்தில் கனமழையால், பாதிக்கப்பட்ட விவசாய பகுதிக்குச் சென்று பார்வையிட்டார் இதைத்தொடர்ந்து, கல்லாங்காடு பகுதிக்குச் சென்று அங்குள்ள சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு வீடு சேதம் அடைந்த நபர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அப்பொழுது, அங்கிருந்த ஒரு மூதாட்டி மாவட்ட கலெக்டர் காலில் விழுந்து எங்களுக்கு வீடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டது இதைத்தொடர்ந்து, அங்குள்ள அதிகாரிகளிடம் மூதாட்டிக்கு ,அரசு திட்டங்களுக்கு உட்பட்டு வீடு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ,அங்கிருந்த கணவனை இழந்த பெண் ஒருவர் தனக்கு சத்துணவு வேலை வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார் மனுவைப் பெற்றுக் கொண்ட, மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதில், ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை வாடிப்பட்டி யூனியன் ஆணையாளர்கள் தோட்டக்கலை அதிகாரிகள் விவசாயத்துறை அதிகாரிகள் மன்னாடிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பவுன் முருகன், உதவித் தலைவர் பாக்கியம் செல்வம், ஒன்றியக் கவுன்சிலர் வீரபாண்டி,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெற்றிச்செல்வன், மாணவர் அணியைச் சேர்ந்த எஸ். ஆர். சரவணன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கேபிள் ராஜா, திருமுருகன், வருவாய் ஆய்வாளர் அழகுகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துக்குமரன், மணிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com