
மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்காவில் பக்ரீத் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.கொரோனா பெரும் தொற்று காரணமாக சென்ற வருடம் ரம்ஜான் மற்றும் பக்ரீத் திருநாள் அன்று இந்த தொழுகை சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்காவில் நடைபெறாத நிலையில் இந்த வருடம் பக்ரீத் திருநாளான இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றுகூடி திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் அவ்லியா தர்காவில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையின் போது சுமார் 70 இஸ்லாமிய சகோதரர்கள் பங்கு பெற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.