
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில், சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அதனை ஆக்கிரமிப்பு எனக்கூறி மாவட்ட நிர்வாகம் அகற்றுவதற்கு முயற்சித்து வருவதால், அதனைக் கண்டித்து இந்து முன்னணியினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து, இந்து முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோயில் அகற்றும் கைவிட வேண்டுமென கோரிக்கையை, ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனால் ,அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், இந்து முன்னணி மதுரை மாவட்ட த்தலைவர் அழகர்சாமி செய்தியாளர்களும் கூறும்போது: தற்போது, உள்ள தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களை அகற்றி வருகிறது.கடந்த வாரம் கோயம்புத்தூர் பெரியகோயில் அகற்றப்பட்டு, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல், தமிழகத்தின் வரிசையாக கோயில்கள் இடிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக,இந்து கோவில்கள் மட்டுமே,அகற்றி வருகிறார்கள். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுமார் 200 ஆண்டு பழமையான கோயில் உள்ளது அந்தக் கோயில் இருக்க கூடாது என்று அந்தப் பகுதியில் பொதுமக்கள் சார்பில் இந்து முன்னணி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்தோம் .மனுவின் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.