வாகனம் நிறுத்துவதில் முன்விரோதம் :வக்கீல் அலுவலகம் புகுந்து தாக்குதல்போலீஸ் விசாரணை.

வாகன நிறுத்துவதில் இருந்த முன்விரோதம் காரணமாக வக்கீல் அலுவலகம் புகுந்து தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை வடக்கு வெளி வீதியை சேர்ந்தவர் வக்கீல் மணிவேல்.அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர்களுக்குள், வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இதைத் தொடர்ந்து ,சதீஷ்குமார் ,வக்கீலின் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்கி உள்ளார். இது தொடர்பாக மணிவேல் கொடுத்த புகாரின் பேரில், திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..