Home செய்திகள் கழிவு நீரால் நோய்கள் பரவும் அபாயம்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கழிவு நீரால் நோய்கள் பரவும் அபாயம்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

by mohan

மதுரை மாநகராட்சி 30- வது வார்டு, மேலமடை சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில், பல ஆண்டுகளாக, மழை காலங்களில் கழிவு நீர் கால்வாய் பெருக்கெடுத்து, சாலையில் சங்கமமாகிறது.மேலும், சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில் குடியிருப்புகளில் வாசல்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நோய் பரவும் அபாயம் உள்ளதாம்.இது குறித்து மதுரை மேலமடை மாநகராட்சி உதவிப் பொறியாளரிடம், பல தடவைகள் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.விரைவிலே, இந்த பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காணவிட்டால், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என, அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் தெரிவித்தார்.இது குறித்து தொழிலதிபர் ராமன் கூறியது:மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயானது, மாநகராட்சியால், புணரமைக்கப்படாமல் உள்ளதால், மழை காலங்களில் கழிவு நீர் பெருக்கெடுத்து வீடுகளை சுற்றி வளைக்கிறது என்றார். மேலும், இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் விரைந்து நடவடிக்கை எடுக்க அப் பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com