உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்தில் சேதமடைந்த வீர வசந்த ராயர் மண்டபத்தை சீர்மைப்பதற்கான பணிகள் மூன்று ஆண்டுகளுக்குப்பின் துவக்கம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டினம் கிராமத்திலிருந்து ராட்சசர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கூடங்குளம் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 2018- பிப்ரவரி மாதத்தில் நடந்த தீ விபத்தில் கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் உள்ள வீர வசந்தராய மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.இங்கு கடை வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.இதையடுத்து மண்டபத்தை சீரமைக்க தமிழக அரசின் அறநிலையத் துறை சார்பில் ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டது.சென்னையில் இருந்து நிபுணர் குழுவினர் தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தை பார்வையிட்டு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனையும் அளித்தனர்.இதைத்தொடர்ந்து நாமக்கல் பகுதியில் உள்ள குவாரியில் இருந்து கற்கள் வெட்டியெடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.இந்நிலையில் கொரோனா தொற்று பொதுமுடக்கத்தால் கற்கள் கொண்டு வரும் பணி தாமதாகியது. இதற்கிடையில் கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து பொதுப்போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு தளர்வுகள் அளித்துள்ள நிலையில் நாமக்கல்லில் இருந்து கற்தூண்களை மதுரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது., மதுரை அவனியாபுரம் அருகே உள்ள செங்குளத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் கற்கள் கொண்டு வரப்பட்டு தூண்கள் செதுக்கும் பணிகள் தொடங்க உள்ளது.இதுதொடர்பாக கோயில் அதிகாரிகள் கூறும்போது, வீர வசந்த ராய மண்டபத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டினம் கிராமபகுதியில் இருந்து இருந்து தூண்கள் அமைக்கும் கற்களை 2 லாரிகள் மூலம் கொண்டு வரப் பட்டது . முறையே15 டன், 10 டன், 7 டன் என எடையுள்ள மூன்று வெவ்வேறு அளவுகளில் ராட்சச கற்கள் கொண்டு வரப்பட்டு அவைகள் மூலம் தூண்களாக சீரமைக்கப்பட்டு வீர வசந்த ராயர் மண்டப பணிகள் துவங்கப்படுகிறது கடந்த மூன்று ஆண்டுகளில் வீர வசந்த ராயர் மணி தொய்வு நிலையில் இருந்தது .தற்போது கற்கள் கொண்டு வரப்பட்டதால் அவை மீண்டும் வேலை துரிதமாக நடைபெற்று பணிகள் துவங்கும் என தெரிகிறது.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்