
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பிரஸ் காலனியில் மின் மற்றும் எரிவாயு மயானம் அமைப்பதற்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர்,மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்அமைச்சர்பேசியதாவது:தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பிரஸ் காலனியில் நவீன மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இப் பகுதிவாழ் மக்களுக்கு மிக முக்கிய தேவையாக இந்த மயானம் இருக்கும்.மதுரை மாவட்டத்தில் கொரோனா காலகட்டத்திலும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பல்வேறு சிறப்பான பணிகளான ஆயுர்வேதம், சித்தா மருத்துவத்தில் அமெரிக்கன் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ படுக்கை வசதிகளை கொண்டு சிகிச்சைக்கு உதவி செய்தார்கள். அதுபோல ,அரசு இராசாசி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரங்களை உருவாக்கி கொடுத்தார்கள். கொரோனா மூன்றாவது அலை வருவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எல்லா வகையிலும் தமிழ்நாடு அரசு எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில், ஆக்சிஜன் உற்பத்தி இன்றைக்கு போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளது.அதேபோல், ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் தேவையான அளவிற்கு உள்ளது. கடந்த இரண்டு மாத காலத்தில் தூங்கா நகரமான மதுரை மாவட்டத்தில் அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் பணிகளால்; இன்றைக்கு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு மாநகர் பகுதிகள், புறநகர் பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து அதிகமான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர்செந்தில்குமாரி, தமிழ்நாடு தொழில் வர்ததக சங்கத் தலைவர்ஜெகதீசன், முதுநிலைத் தலைவர்ரத்தினவேல், செயலாளர்செல்வம், பொருளாளர்ஸ்ரீதர், துணைத் தலைவர்கள்;தனுஸ்கோடி,பா.ரமேஷ், உதவி செயற்பொறியாளர்மனோகரன், சுகாதார அலுவலர்ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.