
மதுரையில் கடந்த சில நாட்களாகவே கால்நடைகளின் மீதான வன்முறை சம்பவமானது நடைபெற்று வருகிறது குறிப்பாக கடந்த மூன்று மாதத்தில் இருந்து 21 நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதியப்பட்டுள்ளது இதை தவிர பசு மாட்டின் மீது ஆசிட் வீசுதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று வந்தது.இது போன்று கால்நடைகள் மீதான நடைபெறும் வன்முறை சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் பிறந்த சில தினங்களே ஆன ஏழு நாய்க்குட்டிகள் சுற்றித் திரிந்தது அப்பகுதி யில் உள்ள் சில நபர்களுக்கு இடையூறாக இருந்ததால்,அந்த ஏழு குட்டி நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளனர்.இதனால் இன்று காலை ஏழு நாய்க்குட்டிகள் துடிதுடிக்க இறந்த நிலையில் கிடந்தன.இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும் விலங்கு நல ஆர்வலர்கள்கும், கால்நடை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் விசாரணையானது மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.