
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆடி முளைகொட்டு உற்சவம் இன்று வாஸ்து பூஜையுடன் தொடங்கியது. திங்கள் கிழமை காலை 10: 05 மணி முதல் 10:29 மணிக்குள் கன்னியா லக்கனத்தில், கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் விழா நடைபெறும்.வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்படும்.இந்த விழாக்கான ஏற்பாடுகளை,ஆலய தக்கார் கருமுத்து தி. கண்ணன், இணை ஆணையாளர் செல்லத்துரை மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.