
மதுரை திருமங்கலம் வட்டம் அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்ததில் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.தமிழகத்தில் இரு தினங்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது இதையடுத்து மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையால் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதி தென்னமநல்லூர் ஊராட்சியில் காசிபுரம் கிராமத்தில் கரந்தமலை (வயது 35) என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கரந்தமலை அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பினார்.இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் உடனடியாக விசாரனை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்க்கு தமிழக அரசின் நிவாரண உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.