Home செய்திகள் சோழவந்தான் மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில்பெய்த கனமழைக்கு ஒரு வாழை மரங்கள், மற்றும் தென்னை மரங்கள், புளியமரங்கள் வேரோடு சாய்ந்து..

சோழவந்தான் மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில்பெய்த கனமழைக்கு ஒரு வாழை மரங்கள், மற்றும் தென்னை மரங்கள், புளியமரங்கள் வேரோடு சாய்ந்து..

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு சுமார் மூன்று மணி நேரம் பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், வாழை மரங்கள் தென்னை மரங்கள் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கனமழைக்கு, தாமோதரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி 75 தோட்ட காவல்காரன் மரம் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மேலும், சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், காடுபட்டி, புதுப்பட்டி, உள்பட இப்பகுதியிலுள்ள கிராமங்களில் நெல் வாழை தென்னை வெற்றிலை கொடிக்கால் விவசாயம் செய்து வருகின்றனர்.இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள வாழை மரங்கள் சேதம் அடைந்தது.சுமார் 100 தென்னை மரங்கள் மிகவும் பழமை வாய்ந்த 5 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களும் போலீசாரும் வருவாய்த் துறையினரும் ஆங்காங்கே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர். மற்றும் மன்னாடிமங்கலம் பகுதியில் மின்கம்பங்கள் சுமார் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சுமார் 100 மீட்டருக்கு மேல் உள்ள மின் வயர்கள் சேதம் அடைந்து உள்ளது. இதுகுறித்து, சோழவந்தான் மின் வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பங்கள் மற்றும் மின் வயர்களை சரி செய்து வருகின்றனர். இதேபோல், இந்த கனமழைக்கு புதுப்பட்டி காடு பட்டி ஆகிய பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சுவர் இடிந்து மேற்கூரை சேதமடைந்துள்ளது. இது குறித்து, தோட்டக்கலை உதவி அலுவலர் கவிமாலா, முள்ளிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் மணிவேல், மன்னாடிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முத்து குமரன் உட்பட கிராம உதவியாளர்கள் ஆகியோர் சேதமடைந்த வெற்றிலை கொடிக்கால் வாழை மரங்கள் தென்னை மரங்களை உட்பட சேதமடைந்த வீடுகளையும் கணக்கு எடுத்தனர். இச்சம்பவம் குறித்து, தகவல் கிடைத்தவுடன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தாமோதரன் பட்டியில் மரம் விழுந்து பலியான முதியவர் ராமசாமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர், மார் நாட்டான் தலைமையில், தங்களின் வயல் பகுதிகளுக்கு செல்ல சாலை அமைத்து தர வேண்டும் என்றும், தங்களின் கொடிக்கால் பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.மழைக்கு, சேதமடைந்த விவசாயிகளுக்கு மற்றும் மழைக்கு வீடுகள் சேதமடைந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெங்கடேசன் எம்எல்ஏ ஆறுதல் கூறினார். முன்னதாக, சோழவந்தான் பேரூராட்சி அலுவலகம் மற்றும் சோழவந்தான் அரசு மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜுலால் பானு, இளநிலை உதவியாளர்கள், பணியாளர்கள், அரசு மருத்துவர்கள், பணியாளர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!