கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்எதிர் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு உண்மையானதல்ல.

ஜிகா வைரஸ் என்பது டெங்குவின் மறு வடிவம் தான் அது குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டிமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன் கூறும்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செல்வதாகக் கூறிய குற்றச்சாட்டு உண்மையானது அல்ல என்றும் தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் கலந்துகொண்டார் அதேபோல் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நாமக்கல் நடைபெற்ற கூட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும் ஆகையால் முதலமைச்சரின் உத்தரவுப்படி அனைவரையும் கலந்து ஆலோசித்து அதன் படியே செயல்படுகின்றோம் டெங்குவின் மறுவடிவம் உற்பத்தியாகின்றது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர்  சுப்பிரமணியன் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்