Home செய்திகள் திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மதுரை மண்டல அளவிலான மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த மின் வாரிய அதிகாரிகள் அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மதுரை மண்டல அளவிலான மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த மின் வாரிய அதிகாரிகள் அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

by mohan

இந்த கூட்டத்திற்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். இதில் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மின் விநியோக இயக்குநர் செந்தில்வேல், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், எம் எல் ஏக்கள் தமிழரசி, கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், மாங்குடி, காதர்பாட்சா, மதுரை மண்டல முதன்மை பொறியாளர் பாஸ்கரன் உள்ளிட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய் அமைைச்சர்கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணி நடைபெறாததால் அந்த பணிகளை 10 நாட்களில் முடிக்க திட்டமிட்டோம் பெரும்பாலானோர் பணிகளை சிறப்பாக முடித்தனர். ஒரு சிலர் ஆரமப நாட்களில் ஏதும் செய்யாமல் கடைசி 3 நாட்களில் வேகமாக முடித்துள்ளீர்கள் இனி அதுபோல் ஏதும் நடைபெற வேண்டாம் உங்கள் பணி அரசுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைய வேண்டும். கடந்த 2006 முதல் 2011 வரை கருணாநிதி ஆட்சியில் 3.58 பைசா விற்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் 2014 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் 5.1 பைசா விற்க்கு வாங்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாரியம் அதிக கடன் சுமைக்கு தள்ளப்பட்டு ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வட்டி காட்டுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மின் வாரிய கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும. எம் பி, எம் எல் ஏக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குறைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 100 சத்வீதம் தடையில்லா மின்சாரம் வழஙக அனைவரும் ஒன்றிணைந்து பாடு பட வேண்டும். மின்மிகை மாநிலம் என அதிமுக வினர் பொய் பிரச்சாரம் செய்தனர். 4 லட்சத்து 23 ஆயிரம் விவசாயிகள் இதுவரை மின் இணைப்பு கேட்டு காத்திருக்கின்றனர். இதில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. மின் மிகை மாநிலம் என கூறிய அதிமுக விவசாயிகளுக்கு மின்சாரம் வழஙகாதது ஏன். இதே போல் மின்சார உற்பத்தியை பெருக்காமல் வெளியில் அதிக ஒரு யூனிட் ரூபாய் 7 முதல் 9 ரூபாய் பணம் கொடுத்து வாங்க 25 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மேட்டூர், வடசென்னை உள்ளிட்ட மூன்று மின் உற்பத்தி மையங்களை மட்டுமே அதிமுக துவக்கி வைத்துள்ளது. புதிய உற்பத்தி திட்டங்கள் ஏதும் செயல்படுத்தவில்லை. மக்கள் மத்தியில் அதிமுக பொய்யாக விமர்சனம் செய்வதை புறந்தள்ளி விட்டு நமது பணியை சிறப்பாக செய்ய வேண்டும். அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் ஒன்றினைந்து தமிழ்கம் மின் மிகை மாநிலமாக மாற்ற பாடு பட வேண்டும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com