Home செய்திகள் தமிழகத்தின் மக்கள் இது வரை இரண்டாவது டோஸ் தடுப்பூசி 4 சதவீதம் பேருக்கு தான் போடப்பட்டுள்ளது:மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்:

தமிழகத்தின் மக்கள் இது வரை இரண்டாவது டோஸ் தடுப்பூசி 4 சதவீதம் பேருக்கு தான் போடப்பட்டுள்ளது:மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்:

by mohan

7 கோடிக்கு மேற்பட்ட தமிழகத்தின் மக்கள் தொகையில் இது வரை இரண்டாவது டோஸ் தடுப்பூசி 4 சதவீதம் பேருக்கு தான் போடப்பட்டுள்ளது மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசுக்கு வலியுறுத்தி பேசினார்மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் டி.குண்ணாத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது.இதற்கு, மாவட்ட இளைஞரணி அணி செயலாளர் கபி.காசிமாயன் தலைமை தாங்கினார்.இதற்கு முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்டப் பொருளாளர் திருப்பதி ,ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் தமிழ்செல்வன், ராமகிருஷ்ணன், சிங்கராஜ பாண்டியன் , ராஜா,உசிலை வரதன், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி , மற்றும் செல்லம்பட்டி ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்ஆர் பி உதயகுமார் பேசியதாவது:வரலாற்றில் இந்நாள் பொன்நாளாகும் ஆகும் 1977ஆண்டு ஜூன் 30 அன்று புரட்சித்தலைவர் முதன்முதலாக சட்டசபையில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக பணியாற்றிய நாளாகும்நீட் தேர்வுக்கு எதிராக புரட்சித்தலைவி அம்மா எடப்பாடியார்,ஒபிஎஸ் கடுமையாக குரல் கொடுத்து வந்தனர் மேலும் சட்ட ரீதியாக பல்வேறு வழிகளைக் கையாண்டார்கள்மருத்துவத்துறையில் ஏழை எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் எண்ணம் 7.5 சதவீத ஒதுக்கீட்டை எடப்பாடியார் உருவாக்கி அதில் 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கு அரசு ஆணை வழங்கி அதற்குரிய முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கூட்டத் தொடரில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத்தை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலைபெறுவோம் ஸ்டாலின் உறுதி கொடுத்தார். தற்போது ஒரு குழுவை அமைத்தார் . இதற்கு உயர் நீதிமன்றமோ இந்தக் குழு உச்ச நீதிமன்றம் அனுமதி பெறப்பட்டதா, இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையாதா என்று கேள்வி எழுப்பினர்ஆனால், இன்றைக்கு நீட் விவகாரத்தில் அரசும் செல்லும் பாதை சரியான பாதையா, இதற்கு விடிவு கிடைக்குமா, கிடைக்காதா என்று மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டுள்ளனர்.கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்டுள்ள மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎப்எஸ் மற்றும் குரூப்-1 குரூப்-2 ரயில்வே மற்றும் வங்கி ஆகிய போட்டி தேர்வுகளுக்கு மதுரை உட்பட 6 நகரங்களில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை கொடுத்தனர்.அதை அரசு நிறைவேற்ற வேண்டும்.அம்மா ஆட்சி காலத்தில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மேலும் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிவாகி கொடுக்கப்பட்டது.கொரோனா முதல் அலையில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் பாதுகாப்பு அரணை உருவாக்கிக் கொடுத்தார்கள். தற்போது, இரண்டாம் அலையில் பாதிப்பில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது.அதேபோல், தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது இதுவரை தமிழகத்தில் 18 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 4 சதவீதம் பேருக்கு தான் 2 டோஸ் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.ஆகவே ,அரசு மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து மூன்றாவது அலை வருவதற்குள் தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கூறி உள்ளது.அதை நாங்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறவில்லை, உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்றுதான் கூறுகிறோம்.பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும்ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோர்களின் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். அதை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்பெட்ரோல்,டீசல் விலை குறைப்போம் என்று கூறினார்கள் .ஆனால், பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டுகிறார்கள்.அதேபோல், நீட் தேர்வில் மாணவருக்கு பயம் ஏற்ப்படுள்ளது.இதனை‌ பார்க்கும் பொழுது, திமுக ஆட்சியில் இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று கூறியது தான்‌ மக்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறது என்று அவர் பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com