Home செய்திகள் போளூரில் வேளாண் ஒழுங்குமுறை நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

போளூரில் வேளாண் ஒழுங்குமுறை நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் போளூரில் செயல்பாடு வரும் வேளாண் ஒழுங்குமுறை நெல் கொள்முதல் நிலையத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம் எல் ஏ நேரில் ஆய்வு செய்தார்.நெல் கொள்முதல் 1 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 730 ரூபாய் தொகையை விரைந்து விவசாயிகளுக்கு வழங்கிட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் ஒழுங்கு முறை விற்பனை நிலையத்தில் நேரில் சென்று நிலுவைத் தொகை மற்றும் ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தின் நிறை குறைகளை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகளின் நிலுவைத் தொகையை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதை அடுத்து விவசாயிகளின் நிலுவைத் தொகையை விரைந்து செயல்பட்டு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு அளிக்க வேளாண் ஒழுங்கு முறை விற்பனை நிலை அதிகாரிகளுக்கு எம் எல் ஏ கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தினார்,அது மட்டும் அல்லாது போளூர் சுற்றுவட்டார 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நெல் கேழ்வரகு எண்ணெய் வித்துக்கள் போன்ற பல தானியங்கள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து வருகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.இதனைத்தொடர்ந்து வேளாண் விற்பனை நிலையத்திற்கு கூடுதல் தானியக் கிடங்கு புதியதாக அமைக்கவும்,நெற்கலங்கள் சேதம் அடைந்திருப்பதால் அதனை புதுப்பிக்கவும், குடிதண்ணீர் வசதி பெண் விவசாயிகள் வருவதால் கூடுதல் கழிப்பறை வசதி போன்றவற்றை அமைத்து தர வேண்டி விவசாயிகள் மற்றும் கொள்முதல் நிலைய அதிகாரிகளின் கோரிக்கையாக வைக்கப்பட்டது.மேலும் வேலூர் கள்ளக்குறிச்சி செஞ்சி திருவண்ணாமலை ஆத்தூர் சேலம் விழுப்புரம் மதுரை காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதற்கு வருகை தருகிறார்கள் என கூறப்பட்டது.மேலும் மத்திய அரசின் இ நாம் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இணைய தளம் வழியாக நெல் கொள்முதல் செய்ய மற்றும் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்ய இணையதள சேவை மையத்தை பார்வையிட்டார்.வேளாண் ஒழுங்கு முறை விற்பனை நிலையத்தில் பணியாற்றிவரும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் கடந்த ஆண்டு மார்ச் 31 வரை 31 ஆயிரத்து 531 மெட்ரிக் டன் வரை கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் விவசாயிகளுக்கு 3 நாட்களிலிருந்து 7 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வங்கியின் கணக்குகள் மூலம் விவசாயிகளுக்கு இணையவழி வங்கி பண பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படுகிறது என அதிகாரிகள் கூறினர். அதுமட்டுமின்றி ஒரே நாளில் 2000 முதல் 5000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!