Home செய்திகள் மதுரை விமான நிலையம் விரிவாக்கப் பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழு சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.

மதுரை விமான நிலையம் விரிவாக்கப் பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழு சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.

by mohan

மதுரை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது, கூட்டத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மற்றும் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர், பின்னர் செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, “மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது, மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தால் தான் விரிவாக்கம் செய்ய முடியும், தற்போது மதுரை விமான நிலையம் வகை D ல் உள்ளது, 8 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டத்தில் 2 வாரங்களுக்கு நிலம் கையப்படுத்தப்படும், விமான ஓடுதளத்தை நீட்டிக்க வேண்டும், அண்டர் பாஸ் முறையில் நெடுஞ்சாலை அமைக்க வேண்டும், விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் நிதி கோர உள்ளோம், விமான நிலையம் விரிவாக்கம் செய்த பின்னர் பல நாடுகளில் இருந்து விமானங்கள் வர முடியும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழு சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை, விமான நிலையம் விரிவாக்க பணிகள் நடைபெற்ற பின்னர் தென் தமிழகம் வளர்ச்சியடைய உதவியாக இருக்கும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன” என கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com