Home செய்திகள் திமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் இழப்பீட்டு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளதை விவாதம் நடத்த தாயரா ‌‌?ஆர் பி உதயகுமார் திமுகவிற்கு சாவால் .

திமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் இழப்பீட்டு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளதை விவாதம் நடத்த தாயரா ‌‌?ஆர் பி உதயகுமார் திமுகவிற்கு சாவால் .

by mohan

2006 முதல் 2011 வரைதிமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் கோடி இழப்பீட்டு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளதை விவாதம் நடத்த தாயரா ‌‌ என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுகவிற்கு சாவால் விடுத்து பேசினார்மதுரை மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் பயிற்சி முகாம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது இதற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார் இதில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ ஆலோசனை வழங்கினார்மற்றும் இக்கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட அணி நிர்வாகிகள் வேலுச்சாமி,கபிகாசிமாயன், மகேந்திர பாண்டியன், சிங்கராஜ பாண்டியன், ஜஹாங்கீர், ராமகிருஷ்ணன் மற்றும் சாமிநாதன் நெடுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனரஆர் பி உதயகுமார் பேசியதாவது:நீட் தேர்வை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது அதற்கு மறைமுகமாக ஆதரவு தந்தது திமுக ஆகும் .நீட் தேர்வை ரத்து செய்ய புரட்சிதலைவி அம்மா கடுமையாக போராடினார் அதன்பின் எடிப்பாடியார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர்க்கும், ஜனாதிபதிக்கும் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர்அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வரை கடுமையாக வாதாடிய வழக்கறிஞர்கள் எங்களால் முடிந்தளவு அத்தனை முயற்சி எடுத்து விட்டோம் என்று கூறினார்கள்அதற்கு மாற்றாக நீட் தேர்வு பயிற்சி மையத்தையும், அதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடை அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி யார் உருவாக்கினர் இதன் மூலம் 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைத்தது தற்போது இந்த இட ஒதுக்கீடு இருக்கிறதா என்பதைக் கூட அரசு தெளிவுபடுத்தவில்லைதிமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி அப்பாவி மாணவர்களிடம் ஓட்டுக்களை வாங்கி ஜெயித்த திமுக நீட் தேர்வு ரத்து பற்றி சட்டசபையில் கூறவில்லைதற்பொழுது 12ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பெற்று மருத்துவம் படிப்பிற்கு தயாராக உள்ள நிலையில் நீட் தேர்வு உள்ளதா இல்லையா என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தற்போது கேட்டுள்ளார் இதற்கு இதுவரை எந்த பதிலும் கூறவில்லை ஆனால் நீட் பயிற்சி வகுப்பிற்கு அனைவரும் தயாராக இருங்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார் நீட் தேர்வுக்கு குழப்பத்திற்கு தீர்வு காணப்படவில்லை பதில் சொல்ல திமுக தயாராகவும் இல்லைஅதேபோல் ஆளுநர் உரையில் திமுக அரசின் கொள்கை ,லட்சியம் என்னவென்று சொல்ல வில்லை தேர்தல் அறிக்கையில் தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறினார்கள் ஆனால் சட்டசபையில் இது குறித்து கூறவில்லை தற்போது பெட்ரோல் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது சட்டசபையில் இது பற்றி பேசினால் எகத்தாளமாகவும் கேலியுமாக பேசுகிறார்கள் வளர்ச்சித் திட்டம் குறித்து பேச மறுக்கிறார்கள்அதேபோல் மின்சாரத்துறையில் இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் கூறியுள்ளதாக திமுகவினர் கூறியுள்ளார் திமுக ஆட்சிக்காலத்தில் மிகக் கடுமையான மின்வெட்டு இருந்தது அதையெல்லாம் சரி செய்து மின் கட்டணத்தை உயர்த்தாமல் தடையில்லா மின்சாரத்தை வழங்கப்பட்டது என்று இதற்கு சரியானவிளக்கத்தை முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் தணிக்கை அறிக்கையில் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தது இந்த இழப்பீடு இருக்கு முழு பொறுப்பு ஏற்று திமுக விவாதம் செய்ய தயாரா நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை மட்டும் காண்பித்து எந்த பணியும் நடைபெறவில்லை என்று கூறினார்கள் ஆனால் பாரத பிரதமரை ஸ்டாலின் சந்திக்கும் பொழுது எய்ம்ஸ்க்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் இப்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிமுக ஆட்சியில் இடம் கொடுக்கப்பட்டது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்அதேபோல் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் பின்தங்கிய மாநிலமாக உள்ளது திமுக செய்யும் தவறுகளை திசைதிருப்பும் வகையில் எங்கள் மீது சேற்றை வாரி இறைத்து தப்பிக்க முயற்சிக்கின்றனர் அவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது இதையெல்லாம் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்சட்டசபையில் எங்களுக்குமக்களின் பிரச்சினையை எடுத்து கூற எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஆனால் வழக்கறிஞர்களாகிய நீங்கள் நீதிமன்றம் மூலம் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அவர் பேசினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!