Home செய்திகள் அரசு அமைப்புகள் மூலம் வந்த அவசர கோரிக்கையை அடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அரசு அமைப்புகள் மூலம் வந்த அவசர கோரிக்கையை அடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

by mohan

சுரபி அறக்கட்டளை & தாய்மடி இல்லம்,இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி திருப்பரங்குன்றம் கிளை,அன்னபூரணி சேவா ஆகிய அமைப்புகள் சார்பாககல்மேடு அன்னை சத்யா நகர், பகுதியில், சவால் நிறைந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 50 குடும்பத்தினரை அடையாளம் கண்டு… இந்த பேரிடர் காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பசிப்பிணியை போக்க அவர்களின் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், புளி, மஞ்சள் பொடி, மிளகு, சீரகம், உப்பு, சீனி, மசாலா பொடி, துவரம் பருப்பு, வெந்தயம், இவை போன்ற இதர மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக கொடுக்கப்பட்டது.மேலும் 300 பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது.சமூக நலத்துறையின் மகிளா சக்தி கேந்திரா அலுவலர் வினோதாகுழந்தைகள் பாதுபாப்பு அலகு துறை சார்பாக அருள்சுரபி அறக்கட்டளை & தாய்மடி இல்லம் நிர்வாகி சேது முத்து ராஜ்இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி திருப்பரங்குன்றம் கிளை சேர்மன் பாரதி, நிர்வாகிகள் ஜெகதீஸ்வரி, அமுதா, உமா மகேஸ்வரிஅன்னபூரணி சேவா ராமகிருஷணன், நாகலெட்சுமிஉதவும் கரங்கள் கிஷோர் குமார், ஹரி கிருஷ்ணன் குழுவினர் இணைந்து இப்பணியை மிகச் சிறப்பாக செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!