Home செய்திகள் கரும்பு விவசாயிகளை அலைக்கழிக்கும் தரணி சர்க்கரை ஆலை அதிகாரிகள் சரியான நேரத்தில் கரும்பு வெட்டா விட்டால் பல லட்சம் நஷ்டம் ஏற்படும் என கரும்பு விவசாயிகள் வேதனை.

கரும்பு விவசாயிகளை அலைக்கழிக்கும் தரணி சர்க்கரை ஆலை அதிகாரிகள் சரியான நேரத்தில் கரும்பு வெட்டா விட்டால் பல லட்சம் நஷ்டம் ஏற்படும் என கரும்பு விவசாயிகள் வேதனை.

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் தெற்கு வெங்காநல்லூர் சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது இந்த ஆண்டு போதிய மழை பெய்ததால் கரும்பு விவசாயம் செழிப்பாக உள்ளது .இதே நேரத்தில் கரும்பு வெட்ட வேண்டிய நேரத்தில் வெட்டாமல் வாடி விடுவதாகவும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் தரணி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒரு டன் 2 டன் 500 டன் என விவசாய நிலங்களுக்கு ஏற்ப ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது .அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கரும்புகளை வெட்டாத நிலை ஏற்பட்டுள்ளது ஆகையால் கரும்பு விவசாயிகள் உரிய நேரத்தில் வெட்டுவதால் ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுவதாகவும் இந்த இழப்பீடு தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.இதுகுறித்துஇராஜபாளையம் மருதூர் கம்மாய் பாசனத்தில் விவசாயம் செய்யக்கூடிய கரும்பு விவசாயி விக்னேஸ் கூறும்பொழுது 60 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு உள்ளதாகவும் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக கரும்பு வெட்ட வேண்டிய நேரத்தில் வெட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது அப்போது கரும்பு வெட்டினால் வெட்டு கூலிக்கு வருகின்ற ஆட்களுக்கு இடம் கொடுக்க முடியாது மேலும் கரும்பு வெட்டியதை கொண்டு செல்ல முடியாமல் வாகனங்கள் பதிந்து விடும் ஆகையால் தண்ணீர் வற்றிய பின் கரும்பு வெட்டும்மாறு தரணி சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கூறினோம் ஆனால் நிர்வாகிகள் அந்த டைமில் வெட்ட வில்லை என்றால் அடுத்த உறை வெட்டுவதாக வாக்குறுதி அளித்தனர்.ஆனால் தற்போது கரும்பு வெட்டுவதற்கு ஆட்கள் அனுப்பாமல் கரும்பு காய்ந்து விடுவதாகவும் கரும்பு வெட்டுவதற்காக கூலி ஆட்கள் வந்து வெட்டிக் கொண்டு இருந்தாலும் மற்ற இடத்திற்கு மாற்றி விடுவதாகவும் ஆகையால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். ஏற்கனவே நிலுவைத் தொகையாக பத்து லட்ச ரூபா உள்ளது வழங்கவில்லை .எனவும் மேலும் மேலும் விவசாயிகள் இதுபோல் வேதனை செய்தால் விவசாயிகள் என்ன செய்வது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கரும்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என வேதனையுடன் தெரிவித்தார். ஆகையால் வேளாண்மைத் துறையும் வட்டாட்சியர் அவர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரணி சர்க்கரை ஆலை தொடர்புகொண்டு உடனடியாக கரும்பு வெட்ட வேண்டும் கரும்பு விவசாயிகள் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!