Home செய்திகள் மதுரையில் கொரோனா ஊரடங்கால் அழகு கலை நிபுணர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் திருமணத்திற்கு விதிமுறைகளுடன் தளர்வுகள் தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை.

மதுரையில் கொரோனா ஊரடங்கால் அழகு கலை நிபுணர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் திருமணத்திற்கு விதிமுறைகளுடன் தளர்வுகள் தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை.

by mohan

தமிழகத்தில் கொரோனா பெரும்தொற்று இரண்டாம் அலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இரண்டு மாதங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் போதுமான வருமானம் ஈட்ட முடியாமல் தவித்து வருவதாக அழகு கலை நிபுணர்கள் மற்றும் திருமண ஆடை வடிவமைப்பாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பராசக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர், சண்முகப்பிரியா இவர் அழகு கலை நிபுணர் ஆகவும், திருமண ஆடை வடிவமைப்பாளராக இருந்துவருகிறார்.தற்போது நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையான முறையில் வீடுகள், கோவில் நிலையங்களை நாடுவது வெகுவாக குறைந்து வருகிறது,இதனால் திருமணங்கள் மூலம் வருவாய் ஈட்டி வந்த அழகு கலை நிபுணர்கள் திருமண ஆடை வடிவமைப்பாளர்கள் பெரும்சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக திருமண விட்டார்களின் பெண்கள் தங்களது ஆடைகளை கண்கவரும் விதமாகவும், நவீன முறையில் வித்தியாசமாகவும், ஆடம்பரமாகவும் அணிய விரும்புவார்கள்.மேலும் தங்களை அழகுபடுத்தவும் நினைப்பார்கள் இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக தற்போது திருமணத்திற்கு விதிமுறைகள் விதிக்கப்படாததால் எளிமையான முறையில் நடைபெறுகிறது.சண்முகப்பிரியா அழகுக்கலை சார்ந்த படிப்புகள் படித்து அதில் பட்டம் பெற்றவர். அழகு கலை நிபுணர்கள், நடிகர் விக்ரமின் ஐ படத்தில் நடித்தவரும் பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட்மான ஓஜாஸ் ராஜனியிடம் விருதுகளை பெற்றுள்ளார்.இவரிடம் அழகுகலை மட்டுமல்லாமல் ஆடை வடிவமைப்பதிலும் பழங்கால முறைப்படி கைகளாலே ஆடை வடிவமைப்பதில் ஆரி வேலைபாடுகளில் சிறந்து விளங்குகின்றனர்.தஞ்சாவூர் பராம்பரிய மிகவும் பழமை வாய்ந்த முறையில் திருமணத்திற்கு அணியும் ஆடைகளில் கைகளாலே வடிவமைக்கப்பட்ட ஆடைகள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.ஒரு ஆரி வேலைபாடுகள் நிறைந்த ஜாக்கெட் கூலி ருபாய் 5ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகின்றனர்.தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவினால் போதுமான ஆர்டர்கள் வராமல் தவித்து வருகின்றனர்.திருமணத்திற்கு பெண்கள் அணியும் ஆடைகள் 5000 ரூபாய் முதல் 50,000 வரையிலான ஆடை வடிவமைப்புகளை இவர்கள் செய்து வருகின்றனர்.தமிழக அரசு திருமணம் உளிட்ட விழாக்களுக்கு மேலும் தளர்வுகள் அளித்தால் மட்டுமே தங்களது வாழ்வாதாரத்தை நீட்டிக்க முடியும் என அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!