Home செய்திகள் கொரோனா காலத்தில் பலருக்கு உதவி செய்து அதே கொரோனா தொற்றால் உயிரிழந்த சமூக ஆர்வலரின் மனநலம் பாதித்த மகன் .அரசிடம் உதவி கேட்டு காத்திருக்கும் அவல நிலை.

கொரோனா காலத்தில் பலருக்கு உதவி செய்து அதே கொரோனா தொற்றால் உயிரிழந்த சமூக ஆர்வலரின் மனநலம் பாதித்த மகன் .அரசிடம் உதவி கேட்டு காத்திருக்கும் அவல நிலை.

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே உள்ள மூதனூர் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம் இவரின் தந்தை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்கம் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார் .கடந்த ஆண்டு இதே மாதம் கொரோனா தொற்றாள் ஊரடங்கு இருந்தபொழுது சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிவந்துள்ளனர் .இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே மாதம் சமூக ஆர்வலரான ஏகே அருணாச்சலம் மற்றும் அவரது மனைவி கீதா ஆக இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சிகிச்சை பலனில்லாமல் (மனைவி )கீதா 29 ஆம் தேதியும் கணவர் Ak அருணாச்சலம் 30ஆம் தேதியும் உயிரிழந்துள்ளனர் .இவர்களின் இரண்டாவது மகனான மணிகண்டன் மூளை வளர்ச்சி மற்றும் 100 சதவீத மாற்றுத்திறனாளியாக உள்ளார் இவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலம் அடைந்துள்ளார். இந்த நிலையில் தாய் தந்தை இறந்தது கூட இவருக்குத் தெரியாது .ஆதரவற்று இருந்த மணிகண்டனின் அண்ணன் சென்னையில் இரண்டு மாதங்கள் வைத்து சிகிச்சை அளித்த பின்பு இராஜபாளையத்தில் தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார் .தற்போது இவருக்கு தேவையான உதவிகள் மற்றும் இயற்கை உபாதைக்கு தேவையான பேம்பர்ஸ் உள்ளிட்ட செலவுகள் நாள்தோறும் 500 ரூபாயை செலவவதால் தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளனர் இவருக்கு ஒரு ஹாஸ்டல் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது இவரை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.கொரோனா நோய் தொற்றால் தாய் தந்தையை இழந்து வாடும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாகஉள்ள மணிகண்டனுக்கு உதவி செய்ய வேண்டுமென அவரது அண்ணன் வேலாயுதம் கேட்டுக் கொள்கிறார் .மணிகண்டனுக்கு காலையில் சுத்தம் செய்து அவருக்கு தேவையான உதவிகள் செய்து கூடவே இருந்து பார்ப்பதற்கு நேரம் சரியாகி விடுகிறது என் இரண்டு பெண் குழந்தைகளை பார்ப்பதற்கு என்னால் வேலைக்கு முடியவில்லை இரை விட்டில் வைத்து பார்ப்பதால் நான் வேலைக்கு செல்ல முடியவில்லை என் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு வழி கிடைக்கும் ஆகையால் தமிழக அரசு தமிழக முதல்வரும் ஸ்டாலின் அவர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.மணிகண்டனின் அண்ணி கூறும் பொழுது எனது மாமனார் மற்றும் மாமியாருக்கு பார்வையற்றவர்களுக்கு ஏழை எளிய மக்களுக்கும் பல உதவிகளை செய்து ஜனாதிபதியுடன் கூட விருதுகள் பெற்றுள்ளனர் அப்படி மற்றவருக்காக உழைத்தவர்கள் மகனுக்கு இன்று நாங்கள் அரசிடம் உதவி கேட்டு கையேந்தி நிற்கின்றோம் தமிழக அரசு கருணை உள்ளத்துடன் தமிழக முதல்வரும் .மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாகஉள்ள மணிகண்டனுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!