Home செய்திகள் இந்தாண்டு நீட் பயிற்சி வகுப்புகள் நடக்குமா? – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்.

இந்தாண்டு நீட் பயிற்சி வகுப்புகள் நடக்குமா? – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்.

by mohan

இந்தாண்டு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் இருந்து திரும்பியவுடன் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு இடம் தேர்வு செய்வதற்காக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.அதற்காக மதுரை நகர் பகுதிகளில் 6 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், அதில் எந்த இடத்தில் நூலகம் அமைக்கலாம் என்பது குறித்து மாட்டுதாவனி பேருந்து நிலையம் அருகே, உலக தமிழ்ச்சங்க வளாகம், அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆய்விற்கு பின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டியளித்தார்….கலைஞர் நினைவு நூலகம் மூலமாக மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர்கள் பயன்படுவார்கள்.அறிவொளி தருகின்ற கலங்கரை விளக்கமாக அமைய வேண்டும் என்கிற நோக்கத்தில் நிறுவப்பட உள்ளது.கலைஞர் நினைவு நூலகம் அமையவுள்ள இடம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும்.இந்தாண்டு நீட் தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து முதல்வர் டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் சட்டசபையில் பேசி முடிவெடுக்கப்டும்.பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. அது வந்த பின்னர் மாணவர்களுக்கு ஊசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தாண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் சேர்வார்கள். அவர்கள் அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதில் அரசு தயாராக உள்ளது.தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் அச்சம் இன்றி புகார் அளிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் பள்ளிகள் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்துவது தொடர்பாக தவறான தகவல் பரவி வருகின்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com