Home செய்திகள் திருப்பரங்குன்றம் மலையில் உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி பரத்வாஜ் ஸ்வாமிகள் கடும் வெயிலில் பிரார்த்தனை.

திருப்பரங்குன்றம் மலையில் உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி பரத்வாஜ் ஸ்வாமிகள் கடும் வெயிலில் பிரார்த்தனை.

by mohan

உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர் நிறுத்தப் பெற்று அங்கு அமைதி வேண்டி சென்னை ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் திருப்பரங்குன்றம் மலையில் கடும் வெயிலில் பிரார்த்தனை செய்தார்.சென்னையை சேர்ந்த யோகமாயா ஸ்ரீ புவனேஸ்வரி பீடாதிபதி பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் இன்று திருப்பரங்குன்றம் மலை மேல் கடும் வெயிலில் பாறையில் அமர்ந்து உக்ரைன் நாட்டில் நடைபெறும் ரஷ்யாவிற்கு எதிரான போர் நிறுத்தம் உண்டாகவும் சமாதானம் அடையவும் உயிர் சேதம் அடையாமல் இருக்கவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்குறிப்பாக தமிழ்நாட்டில் நீர்நிலைகள் நிறைந்து ஓடவும், விவசாயம் சிறந்து விளங்கவும் கொரோனா போன்ற வைரஸ் நோயின் தாக்கத்தில் இருந்து இந்தியா விடுபடவும் வராகி அம்பாளை நினை வில வைத்து கடுமையான விரதம் இருந்தார்.மேலும் மஞ்சள் நீரில் நீராடி விபூதி ஸ்நானம் செய்து அம்பாளின் உத்தரவுப்படி தகிக்கும் வெயிலில் இரண்டு மணி நேரம் வராகி அம்பாளின் மூல மந்திரத்தை ருத்ராட்ச மாலையை வைத்துக்கொண்டு ஜெபித்து பக்தர்களுக்காக வேண்டி தவம் நடத்தினார்.திருப்பரங்குன்றம் மலையில் கடும் வெயிலில்பரத்வாஜ் சுவாமிகள் தவம் செய்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.பொதுமக்கள் பக்தி பரவசம் அடைந்தனர். அங்கு வந்த பக்தர்களுக்கு சுவாமிகள் பிரசாதம் வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com