Home செய்திகள் சிறைவாசிகளால் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள். மதுரை மத்திய சிறை அங்காடியில் பொதுமக்கள் விற்பனைக்கு துவக்கம்.

சிறைவாசிகளால் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள். மதுரை மத்திய சிறை அங்காடியில் பொதுமக்கள் விற்பனைக்கு துவக்கம்.

by mohan

தென் மாவட்ட சிறைச்சாலைகளில் முக்கிய சிறைச்சாலையாக விளங்ககூடியமதுரை மத்திய சிறை நிர்வாகத்திற்கு கீழ் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் புரசடை உடைப்பு பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 82 ஏக்கரில் 100க்கும் மேற்பட்ட கைதிகள் மூலம் குறுங்கால பயிர்களாகிய காய்கறிகள், பழவகைகள், கீரை வகைகளும் பயிரிடப்படுகிறது.இந்த நிலையில் தற்போது சிறைவாசிகளின் பொருளாதார நலன்கருதியும் சிறை நிர்வாகத்தின் வருமானத்தை பெருக்கும் நோக்கோடு கடந்த 2020ஆம் ஆண்டில் மதுரை சிறைத்துறை துணைத்தலைவர் பழனியின் ஆலோசனைப்படி குறுகிய கால பயிர்களான, காய்கறிகள், பழங்கள் அங்கு வளர்க்கப்படும் ஆடு மாடு போன்ற கால்நடைகளின் மூலம் கிடைக்ககூடிய கழிவுகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் இயற்கை உரங்களை பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தற்போது முதல்முறையாக திறந்தவெளி சிறைச்சாலையில் பயிரிடப்பட்ட சுமார் 2 டன் தர்ப்பூசணி பழங்கள் மதுரை மத்திய சிறைச்சாலை வாயிலில் உள்ள சிறை அங்காடி மையத்தில் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வந்துள்ளது.கோடை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் மத்தியில் தர்பூசணி பழத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் சந்தை மதிப்பை விட 30 முதல் 40 சதவீதம் குறைவான விலைக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்ப்பூசணி பழங்கள் சிறை நிர்வாகம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழங்கள் பெரிதாகவும், தரமானதாகவும் இருப்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com