Home செய்திகள் தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மதுரையை உருவாகிட 6 அம்ச திட்டங்கள்.முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசுக்கு வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மதுரையை உருவாகிட 6 அம்ச திட்டங்கள்.முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசுக்கு வேண்டுகோள்

by mohan

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மதுரையை உருவாகிட 6 அம்ச திட்டங்களை முழுமையாக மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை மக்கள் சார்பில் மதுரை மக்கள் சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து கூறினார்.திருமங்கலம் தொகுதியில் உள்ள புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் சண்முகப்ரியாபாவடியான், வக்கீல் பாஸ்கரன் உடன் இருந்தனர் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது ;நகர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வையும், நோயின் தாக்கத்தையும் அதன் விபரீதங்களை எடுத்து வைக்க வேண்டும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முழுமையான விழிப்புணர்வை கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும்.கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்துவதின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் பாதிக்கப்பட்டவர்களை தொற்றின் ஆரம்ப நிலையை கண்டறிந்து அரசின் கோவிட் .19 வழிகாட்டு நெறிப்படி தேவையான சிகிச்சையை விரைவாக அளித்தால் தொற்று குணமடைந்து அதன் மூலம் குணமடைவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும்.தேவையான இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனைத்து பகுதிகளில் தடுப்பூசி முகாமை விரைவுபடுத்த வேண்டும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் மக்கள் அதிகமாக கூட்டமாக உருவாவதை தடுக்கும் வகையில் முறையான நடவடிக்கை மேற்கொண்டும், அதிக அளவில் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று அனைத்து மாவட்ட ,தொகுதி, பகுதிகளில் பாரபட்சமின்றி வினியோகம் செய்து மக்களை காக்க வேண்டும்.ஒவ்வொரு கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டுக்கு சென்று அவர்களின் ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை மருத்துவ உபகரணங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.தொற்று உள்ளவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் உளவியல் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்.அதேபோல் நோய் தொற்றார்களுக்கும், பணியாளர்களுக்கும் உயிரை பணயம் வைத்து முன்களபணி செய்துவருபவர்களுக்கும் தரமான உணவு வசதிகளை போதுமான அளவில் சரியான நேரத்தில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.மேற்கண்ட 6 நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டால் கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மதுரை முதலிடத்தில் வந்துவிடும் என்பதை மதுரை மக்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.முதல் அலையின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அம்மாவின் அரசு 17 அமைப்புசாரா தொழிலாளர்கள், 14 நலவாரிய தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் உட்பட 35.65 தொழிலாளர்களுக்கும் மற்றும்13.35 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார்.தற்போது அதேபோல் முன்னாள் முதலமைச்சரும் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கடந்த 19ஆம் தேதி தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார் அதில் அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரிய தொழிலாளர்களுக்கும் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.ஆகவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் உடனடியாக நிவாரண உதவி மற்றும் உணவு பொருட்களை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com