Home செய்திகள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளருக்கு அபராதம் விதித்த போலீசார்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளருக்கு அபராதம் விதித்த போலீசார்

by mohan

மதுரை வலையங்குளம் பகுதியிலுள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக மணிகண்டன் என்பவர் பணிபுரிந்து வருகிறார் .இவர் நேற்று அச்சம்பத்து பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் பணிகளை முடித்துவிட்டு மேல வேலூரில் உள்ள அவரது இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்றுகொண்டிருந்தபோது சிந்தாமணி சாலையில் ரயில் தண்டவாளத்திற்கு அருகே காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்தபொழுது தனது அடையாள அட்டை காண்பித்து நான் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறேன் என்று கூறியவுடன் பெயர் மற்றும் வாகனம் எண்ணை காவல்துறையினர் குறித்து விட்டு அவரை அனுப்பி வைத்தனர்.

பின்பு அவருடைய தொலைபேசி எண்ணிற்கு காவல்துறை சார்பில் 500 ரூபாய் அவதாரம் செலுத்த வேண்டும் என்றுகுறுஞ்செய்தி வந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார் .பின்பு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணியின் போது கீரைத்துறை காவல்துறையினர் தேவையற்ற முறையில் அபராதம் விதிப்பதை தடுத்து உதவுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும் தமிழக அரசு கொரோண இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே சுற்றினாள் காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .குறிப்பாக மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்த துறையினர் மற்றும் முன்களப்பணியாளர்கள் இவர்கள் மட்டும் தடையில்லாமல் பணி செய்யலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .ஆனால் காவல்துறையினர் பணியாளர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு அவதாரம் விதித்திருப்பது மனதளவிலும் பொருள் அளவிலும் மிகவும் பாதிப்பை உண்டாக்குகிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com